×

30ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல், நவ. 27: நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 30ம் தேதி காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்து, சமூக விலகலை கடைப்பிடித்தும், முககவசம் அணிந்தும், காணொலி காட்சியில் பங்கேற்கலாம். கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம். மேலும், கோரிக்கைகள் தெரிவிக்க உள்ள விவசாயிகள், கூட்டம் நடைபெறும் அன்று காலை 10 மணிக்குள், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு  கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : meeting ,
× RELATED விவசாயிகள் குற்றச்சாட்டு 2 மணிநேரம்...