×

புதுமண தம்பதி சென்ற கார் டேங்கர் லாரி மீது மோதியது

ராசிபுரம், நவ. 27: ராசிபுரம் அருகே,  திருமணம் முடிந்து குலதெய்வ கோயிலுக்கு புதுமண தம்பதி கார்,  பெட்ரோல் டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில், பெண் ஒருவர் பலியானார். ராசிபுரம் அருகே,  திருமணம் முடிந்து குலதெய்வ கோயிலுக்கு புதுமண தம்பதி கார்,  பெட்ரோல் டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில், பெண் ஒருவர் பலியானார்.நாமக்கல்  மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்த வினோத்குமார்  மற்றும் இந்துஜாவுக்கு, நேற்று காலை ராசிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. விருந்தை முடித்துக்கொண்டு புதுமணத் தம்பதி, புதுச்சத்திரத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு உறவினர்களுடன் காரில் சென்றனர்.  வழியில் அணைப்பாளையம் அருகே தேசிய  நெடுஞ்சாலையில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பெட்ரோல் டேங்கர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த உறவினரான வளர்மதி என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாகஅவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்தில் காயமடைந்த புதுமண தம்பதிகள் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து ராசிபுரம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : newlyweds ,
× RELATED தலைபொங்கல் கொண்டாட வந்த...