×

மனைவி பிரிந்து சென்றதால் வங்கி ஊழியர் தற்கொலை

நாமக்கல், நவ. 27: நாமக்கல் அருகே கள்ளக்காதலை கணவர் கைவிட மறுத்ததால், மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றார். இதனால், மனவேதனையடைந்த வங்கி ஊழியர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் அடுத்த பொம்மசமுத்திரத்தை சேர்ந்த சுப்ரமணியன்(53), ரெட்டிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சிவகாமி. அதே பகுதியில் வசித்து வரும் கவிதா(36) என்ற பெண்ணுடன் சுப்ரமணியனுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை சிவகாமி கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் தொடர்பை நீடித்தனர். இதையடுத்து சிவகாமி தனது மகளுடன், இடைப்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு, கடந்த சில மாதத்துக்கு முன் சென்றுவிட்டார். தனது குடும்பம் பிரிய கவிதா தான் காரணம் எனகூறி, அவரிடம் சுப்ரமணியம் தகராறு செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கவிதா, கடந்த இரு தினங்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனிடையே சுப்ரமணியன், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Bank employee ,suicide ,
× RELATED அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்...