×

திருப்பூரில் 75 பேருக்கு கொரோனா தொற்று

திருப்பூர், நவ.27: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 115 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 71  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 14,293 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 615  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை 207 ஆக உள்ளது.

Tags : Corona ,Tirupur ,
× RELATED 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி