×

அஞ்சல் காப்பீடு முகவர்களாக பணிபுரிய விரும்புபவர்கள் நேர்காணலில் பங்கேற்க அழைப்பு

ஊட்டி, நவ.27: அஞ்சல் காப்பீடு முகவர்களாக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் அடுத்த மாதம் 9ம் ேததி ஊட்டியில் நடக்கும் நேர்காணலில் பங்கேற்கலாம். அஞ்சல் கண்காணிப்பாளர் குணசீலன் கூறியிருப்பதாவது,நீலகிரி அஞ்சல் கோட்டம் அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக முகவர்களை பணியமர்த்த உள்ளது. இத்தேர்வில் 18-50 வயதிற்குட்பட்ட 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்குபெறலாம். அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் அடுத்த மாதம் 9ம் தேதி மாலை 4 மணிக்கு அஞ்சலக கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், ஊட்டி 643001 என்ற அலுவலகத்தில் நடைபெற உள்ள நேர்காணலில் ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். நேர்காணலில் பங்கேற்பவர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0423-2444193, 2443785 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அஞ்சல் கண்காணிப்பாளர் குணசீலன் தெரிவித்துள்ளார்.

Tags : insurance agents ,interview ,
× RELATED தமிழக அரசு எதில் வெற்றி நடை போடுகிறது...