×

7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் நஞ்சநாடு அரசுப் பள்ளி மாணவருக்கு மருத்துவ படிப்பு சீட் கிடைத்தது

ஊட்டி,நவ.27:ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவர் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்துக் கொண்டுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 இட ஒதுக்கீட்டில் கீழ் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்வதற்கான ஆணை பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் நேற்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இவருடன் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Tags : student ,Nanjanadu Government School ,
× RELATED தடயவியல் துறை ஆய்வில் நீட் மோசடி மாணவியின் லேப்டாப், செல்போன்