×

வங்கி ஊழியர் மர்மச்சாவு

கோவை, நவ.27: கரூர் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவர் மகள் கோகிலா (22). கோவை சின்னியம்பாளையத்தில் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றினார். இவர் ேகாவை பீளமேட்டில் மகளிர் விடுதியில் வசித்து வந்தார். சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்த இவர், நேற்று முன்தினம் தான் தங்கியிருந்த அறை முன் மயங்கி கிடந்தார். இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விரக்தியால் விஷம் குடித்து இறந்தாரா?, உடல் நலன் பாதிப்பினால் இறந்து விட்டாரா? என பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED குடியிருப்பு பகுதிகளில் குடியரசு தின விழா