×

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 48 ஆயிரத்தை கடந்தது

கோவை, நவ. 27:  கோவையில் கொரோனா காரணமாக நேற்று 158 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது. இருப்பினும், கடந்த காலங்களைவிட தற்போது கொரோனா காரணமாக பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதன்படி, நேற்று கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த மொத்தம் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 133-ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 156 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 849-ஆக உள்ளது. கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 679 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். நேற்று கொரோனா தொற்றினால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 76 வயது முதியவர் மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 94 வயது முதியவர் என 2 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 605-ஆக உயர்ந்தது.

Tags : Corona ,district ,
× RELATED 4 பேருக்கு கொரோனா பாதிப்பு