×

மூதாட்டியிடம் நகை பறிப்பு

கோவை நவ.27: கோவை கணபதி வ.உ.சி. நகரை சேர்ந்த கருப்பையா என்பவர் மனைவி பேச்சியம்மாள் (65). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு அருகே பைக்கில் வந்த 2 பேர் அவரிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலியை பறித்து அங்கே இருந்து தப்பி சென்றனர். பேச்சியம்மாள் கூச்சலிட்டபோது அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் பைக்கில் வந்த திருடர்களை விரட்டி சென்றனர். ஆனால் திருடர்களை மடக்கி பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி