×

கல்வித்துறையில் 7 பேர் மட்டுமே பங்கேற்பு

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஸ்டிரைக்கில் கலந்து கொண்டவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் 7 ஊழியர்கள் மட்டுமே ஸ்டிரைக்கில் பங்கேற்றது தெரியவந்தது. ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வந்திருந்ததாக அதிகாரிகள் கூறினர்.பொதுவேலை நிறுத்தம் 40 சதவீத ஊழியர்கள் பங்கேற்பு ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் 40 சதவீத அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாடு தழுவிய பொதுவேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டத்தில் வங்கி, அஞ்சல் துறை, ரயில்வே, எல்.ஐ.சி. உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள், மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வருவாய் துறையினர் வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த 40 சதவீத ஊழியர்கள் பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்றது உளவுப்பிரிவு போலீசாரின் கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்தது.

Tags :
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...