×

நிவர் புயலால் மாவட்டத்தில் சாரல் மழை

ஈரோடு, நவ. 27: நிவர் புயல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது.
தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை தொடர்ந்த லேசான சாரல் மழை பெய்து வருகின்றது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நேற்று காலை சற்று கனமழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் பேர் தங்க வைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு முகாம்கள் அமைத்துள்ளது.
இதனிடையே நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம், ஈரோடு, பெருந்துறை தலா 6 மில்லிமீட்டர், கோபி 7.6, பவானிசாகர் 2.2, பவானி 8.6, கொடுமுடி 4.8, சென்னிமலை 3, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை தலா 4, கவுந்தப்பாடி 6.2, எலந்தைகுட்டைமேடு 5.4, வரட்டுப்பள்ளம் 3.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 3.8 மில்லி மீட்டர் ஆகும். பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 95.41 அடியாகவும், அணைக்கான வரத்து 913 கன அடியாகவும் இருந்தது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1850 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. மழையினால் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Nivar ,district ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...