×

வந்தவாசி அருகே விபத்து லாரி கவிழ்ந்து 10 லட்சம் கடப்பா கற்கள் சேதம்

வந்தவாசி, நவ.27: வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 லட்சம் மதிப்புள்ள கடப்பா கற்கள் உடைந்து சேதமானது. ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்தவாசியில் உள்ள ஒரு டைல்ஸ் கடைக்கு, கடப்பா கற்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ேநற்று அதிகாலை வந்தது. லட்சுமணன்(40) என்பவர் லாரியை ஓட்டி வந்தார். வந்தவாசி- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை வீரம்பாக்கம் அருகே வந்தபோது, புளியமரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்து கிடந்தது. இதனால் டிரைவர் லாரியை சாலையோரமாக ஓட்டிச்சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் லட்சுமணன் காயமின்றி உயிர் தப்பினார். இருப்பினும், லாரியில் இருந்த ₹10 லட்சம் மதிப்பிலான கடப்பா கற்கள் உடைந்து சேதமானது. தகவலறிந்த வந்தவாசி வடக்கு போலீசார் விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags : Vandavasi ,Kadapa ,
× RELATED கற்களை சரமாரி வீசி தாக்குதல்; வலைகளை...