×

வேலூர் மாவட்டத்தில் நதிக்கரை கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கலெக்டர் அறிவுறுத்தல்

வேலூர், நவ.27: வேலூர் மாவட்டத்தில் நதிக்கரை கிராம மக்களுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. அதேசமயம் ஆறுகள், நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்நிலைகள் அருகாமையில் உள்ள மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் வேலூர் மாவட்டத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளுக்கு ெதாடர் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதில் பொன்னை, கொட்டாறு, அகரம் ஆறு, நாகநதி, கவுண்டண்ய மகாநதி, மோர்தானா அணை ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், நதிக்கரையோரங்களில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள பள்ளி, சமுதாய கூடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களுக்கு செல்லுமாறு கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Collector ,flood victims ,areas ,Vellore district ,places ,
× RELATED காஞ்சிபுரம் நகர பகுதிகளில் நள்ளிரவில் கலெக்டர் திடீர் ஆய்வு