×

பளுகல் அருகே லாரிக்கு தீ வைப்பு தொழிலாளி கைது

நாகர்கோவில், நவ. 27:  புதுக்கடை தோட்டாவரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி(43). இவர் சொந்தமாக டாரஸ் லாரி வைத்து ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் செறுவல்லூர் லாரன்ஸ் என்பவரது மரகுடோனில் இருந்து மரங்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல ரங்கசாமியின் லாரியில் மரங்கள் ஏற்றப்பட்டது. லாரியை மறுநாள் எடுக்கும் வகையில் குடோன் அருகே உள்ள எடைமேடை பகுதியில் லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் செறுவல்லூர் பகுதியை சேர்ந்த சத்தியராஜ்(55) என்பவர் ரங்கசாமியின் லாரியில் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். லாரியில் பிடித்த தீ வேகமாக பரவியது.

இதனை பார்த்த ரங்கசாமி மற்றும் பொதுமக்கள் லாரியில் பிடித்த தீயை அணைத்தனர். இதில் சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. இது குறித்து ரங்கசாமி பளுகல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சத்யராஜை கைது செய்தனர். லாரியில் தீ வைத்ததற்கான காரணம் குறித்து சத்யராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Palugal ,
× RELATED தொழிலாளி மனைவி தீக்குளித்து தற்கொலை