×

மாநகர கமிஷனர் மீட்பு பற்றி அட்வைஸ் கடலூர், நாகையில்

திருச்சி, நவ.25: புயல் மற்றும் மழைக்காலங்களில் பாதிக்கப்படும் மாவட்டங்களில் சுகாதார பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவின் பேரில் திருச்சி மாநகராட்சியில் இருந்து சுகாதார பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அதன்படி தமிழகத்தில் நிவர் புயல் உருவாகி கடலோர மாவட்டங்களில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார பணிகளை மேற்கொள்ள திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் 100 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வர், சுகாதார மேற்பார்வையாளர்கள், மின்பனியாளர்கள் மற்றும் 4 டிப்பர் லாரிகள் கடலோர மாவட்டமான நாகப்பட்டினம் மற்றும் கடலூருக்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் நேற்று அனுப்பி வைத்தார். அப்போது உதவி ஆணையர்கள் திருஞானம், சண்முகம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags : Municipal Commissioner Recovery ,Cuddalore ,Nagai ,
× RELATED வாக்களிப்பதன் அவசியம் பற்றிய...