×

அரசின் நிவாரண முகாம்களுக்கு உடனே செல்லுங்கள் மரக்கிளைகள் வெட்டி அகற்றம் திருவாரூர் மாவட்டத்தில் நிவர் புயல் பாதிப்பை சமாளிக்க 200 போலீசார் தயார்: எஸ்பி தகவல்

திருவாரூர், நவ.25: திருவாரூர் மாவட்டத்தில் நிவர் புயல் பாதிப்பினை எதிர்கொள்ள ஆயிரத்து 200 போலீசார் தயார் நிலையில் இருப்பதாக எஸ்பி துரை தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் மீட்புக்குழுவினர் பயன்படுத்த உள்ள உபகரணங்களை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று எஸ்பி துரை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் நிவர் புயல் பாதிப்பினை எதிர்கொள்வதற்கு அனைத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் உட்பட ஆயிரத்து 200 பேர்கள் இரவு, பகலாக பணிபுரிய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பேரிடர் மேலாண்மை பயிற்சி முடித்த 8 மீட்பு குழுவினர் பேரிடர் மீட்பு குழு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். எனவே புயல் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன் தங்களது உடமைகளையும் பாதுகாத்து வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கல்வி சான்றிதழ், வங்கி புத்தகம், சொத்து பத்திரம் உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாத்து வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்100 மற்றும் 9498181220 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு போலீஸ் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்படுவார்கள். இதுமட்டுமின்றி மாவட்ட தனிப்பிரிவு அலுவலக எண் 9498100865 ,ஹலோ போலீஸ் எண் 8300087700 மற்றும் திருவாரூர் டிஎஸ்பி சரகத்திற்கு 9498100866, நன்னிலம் சரகத்திற்கு 9498100874, மன்னார்குடி சரகத்திற்கு 9498100881, திருத்துறைப்பூண்டி சரகத்திற்கு 9498100891 மற்றும் முத்துப்பேட்டை சரகத்திற்கு 9498100897 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டு கொள்ள படுகிறார்கள். இவ்வாறு எஸ்பி துரை தெரிவித்துள்ளார்.

Tags : government relief camps ,
× RELATED தாழ்வான பகுதிகளில் வசிப்போர் அரசின்...