×

நிவர் புயல், கனமழை எதிரொலி புதுக்கோட்டை வட்டார விவசாயிகள் உடனடியாக பயிர் காப்பீடு செய்யுங்கள்

புதுக்கோட்டை, நவ.25: புதுக்கோட்டை வட்டாரத்தில் நிவர் புயல் மற்றும் கனமழை காரணத்தினால் பயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே புதுக்கோட்டை வட்டாரத்தில் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாய பெருமக்கள் உடனடியாக பிரதம மந்திரியின் திருத்தப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து பயன்பெறலாம் என புதுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது.நிவர் புயல் மற்றும் கன மழையால் பயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது .எனவே புதுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள சம்பா நெல் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாய பெருமக்கள் உடனடியாக பிரதம மந்திரியின் திருத்தப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து பயன்பெறலாம். இதற்கு பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ.458ஃ- செலுத்த வேண்டும்.

காப்பீடு தொகை ஏக்கருக்கு ரூ.30500- ஆகும்.காப்பீடு செய்ய கடைசி தேதி 30ம் தேதி ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஆனால் புயல் மற்றும் கன மழை பெய்தால் இத்திட்டம் நிறுத்தப்பட்டுவிடும். எனவே விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக சிட்டா, அடங்கல்,ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் போன்ற ஆவணங்களை கொண்டு நெல் பயிரினை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ,தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் போன்றவற்றில் காப்பீடு செய்து கொள்ளலாம். உடனடியாக அனைத்து விவசாயிகளும் வெள்ளம்,கனமழை மற்றும் புயலுக்கு முன்பு காப்பீடு செய்து பயன்பெறலாம். மேலும் புதுக்கோட்டை வட்டாரப்பகுதியில் உள்ள தென்னை மரங்களை புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற தென்னை மரங்களின் தலைப்பகுதியின் அடிப்பாகத்தில் உள்ள தென்னை ஓலைகளை வெட்டி அகற்றவும்,முதிர்ச்சி அடைந்த காய்களை அறுவடை செய்யவும்,தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சுதல் மற்றும் உரமிடுதலை தற்காலிகமாக நிறுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் தென்னை மரங்களை காப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags : storm ,Nivar ,area farmers ,Pudukottai ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...