×

வேளாண் அதிகாரி அறிவுறுத்தல் திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் போது நடுவழியில் மாட்டி கொண்ட நரிக்குறவர்கள்

அறந்தாங்கி, நவ.25: திருச்சியில் இருந்து வியாபாரத்திற்கு ராமேஸ்வரம் செல்லும் போது நடுவழியில் மாட்டிக் கொண்ட நரிக்குறவர்களை ஆவுடையார் கோவில் போலீசார் மீட்டு பள்ளியில் தங்க வைத்தனர். திருச்சி பூலாங்குடி துப்பாக்கி தொழிற்சாலை அருகே வசித்து வந்த நரிக்குறவர்கள் இனத்தைச் சேர்ந்த 22 ஆண்கள், 18 பெண்கள், 13 குழந்தைகள் என 53 பேர் ராமேஸ்வரத்திற்கு ஊசி, பாசி விற்பனை செய்ய ஆவுடையார்கோவில் வழியாக சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் நேற்று சென்றனர். அவர்கள் ஆவுடையார்கோவில் அருகே வந்த போது நிவர் புயல் அறிவிப்பு காரணமாக திறக்கப்படாத ஆவுடையார் கோவில் பேருந்து நிலையத்திற்கு வந்து தங்கி இருந்தனர். அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் தங்கி இருப்பது குறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் அவர்களை மீட்டு பாதுகாப்பான இடமான ஆவுடையார்கோவில் அடியார் குளம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கூடத்தில்தங்க வைத்தனர். மேலும் போலீசார்அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடி தண்ணீர்ஏற்பாடுகள் செய்தனர்.

Tags : road ,Narikkuravars ,Rameswaram ,Trichy ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...