×

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரிக்கரை உடைப்பை தடுக்க 10,265 மணல் மூட்டைகள்

பெரம்பலூர், நவ.25: பெரம்ப லூர் மாவட்டத்தில் புயல் மழைக்கு ஏரிக் கரைகள் உடைப்பெடுத்தால் வெள் ளத் தடுப்புப் பணிகளுக் காக 10,265 மணல் மூட்டை கள்தயார். வருவாய் துறை, காவல்துறை மூலம் 7 மீட்பு க்குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும், வாட்ஸ் அப்களில் வரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. இதன் தாக்கத்தால் கனமழை பெய்ய க்கூடிய மாவட்டங்களில் பெரம்பலூரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நி லையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை மற்றும் புயல் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாட்டு பணிகளை முழுவீச்சில் முடுக்கி விட்டுள்ளதாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்  வெங்கடபிரியா தெரிவித்துள்ளார். இதுதொட ர்பாக நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

பெரம்பலூர் மாவட்டத்தில் மழை பாதிப்பால் ஏற்படும் பாதிப்புகளில் சிக்குவோ ரைக் காப்பாற்ற வேப்பந்தட்டை தாலுகாவில் 3 இட ங்களிலும், குன்னம் தாலு காவில் 3 இடங்களிலும், நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் வருவாய்த்துறை மூலம் 5 குழுக்களும், காவல்துறை மூலம் 2குழுக்களும் மீட்புப் பணிகளுக்காக அமைக்கப் பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்ப டும் மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டிலுள்ள சாலைகள், பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்கள் போன் றவற்றை சீரமைக்க 168 ஜேசிபி எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மரங்களை வெட்டக் கூடிய 170 மரம் வெட்டும் நவீன இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள் ளன. மாவட்டத்தில் பொ துப்பணித்துறையின் (நீர் வள ஆதார அமைப்பு) கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளி ல் உடைப்பெடுத்தால் அவ ற்றை தடுப்பதற்காக 10265 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு ள்ளன.

மழை வெள்ளத்தால் கட்டிட பாதிப்பு சாலைகள் போக்குவரத்துத் துண்டிப்பு, இடி மின்னல் தாக்குதல் போ ன்ற பேரிடர் மீட்பு பணிக ளுக்காக பெரம்பலூர் மாவ ட்டக் கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் இயங்கிவரும் பேரிடர் மீட்பு மேலாண்மை அலுவலகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 1077 மற்றும் 1800 425 4556 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் களிலும் 890302 4616 என்ற வாட்ஸ்அப், டெலிகிராம் வலைத் தளங்களிலும் புகார் தெரிவித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். கன மழை எதிரொலியாக பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு உணவு த் தட்டுப்பாடு ஏற்படாதிருருக்க 15,93,599 கிலோ அரிசியும், 1,38,831 கிலோ கோது மையும், 5,26,801 கிலோ சர்க்கரையும், 2,86,612 கிலோ துவரம் பருப்பும், 1,28,640 கிலோ கிராம் பாமாயில் எண்ணெயும், மாவட்ட வழங்கல் துறைமூலம் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

புயல் காற்றில் பாதிக்கப்படும் மின்கம்பங்களை சீரமைப் பதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் 3700 மின்கம்பங்க ள் மற்றும் 65 டிரான்ஸ்பார் மர்கள், மழை வெள்ளத்தின் மூலம் வீடுகளில் புகும் பாம்புகளைப் பிடித்து அப்புறப்படுத்த 9 நபர்கள் பாம்பு பிடிக்க தயார் நிலையில்அமர்த்தப்பட்டுள்ளனர். செல்போன் தொலைபேசி வசதி துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நபர்களை தொடர்பு கொள்ள 33 வாக்கிடாக்கிகள், மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்தத் தேவையான 127 ஜெனரே ட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. புயல், மழைக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆலத்தூர் தாலுகாவில் பாதுகாப்பற்ற இடங்களில் தங்கியிருந்த 3 குடும்பங்க ளைச் சேர்ந்த 13 நபர்களை யும் பாதுகாப்பான இடத்தி ல் தங்க வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜே ந்திரன், சப்.கலெக்டர் பத் மஜா, மாவட்ட திட்ட இயக்குநர் லோகேஸ் வரி, பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர் அம்பிகா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : lake breakage ,district ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி