×

7 மீட்பு குழுவும் தயார்: கலெக்டர் தகவல் பெரம்பலூர் மாவட்டத்தில் டூவீலர் மானிய திட்டத்திற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர்,நவ.25:பெரம்ப லூர் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிருக்கு இரு சக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுள்ள வர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வெங்கடபிரியா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர், இருசக்கர வாகனம் வாங்கு வதற்கு, தமிழக அரசின் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் ரூ.25ஆயிரம் அல்லது வாகனத்தின் மொத்த தொகையில் 50சதவீத தொகை இரண்டில் எது குறைவோ அந்தத்தொகை அரசு மானியமாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.31,250 வழங்கப்படும். 125சிசி-க்கு குறைவான கியர்லெஸ் வாகனத்தை பயனாளிகள் தங்களது சொந்த நிதியில் இருந் தோ, வங்கி கடன் அல்லது கடன் வழங்கும் நிறுவனங் களிடமிருந்தோ கடன் பெற்று வாங்கலாம். மானியம் பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பயனாளிகள் 18 முதல் 45 வயது உள்ளவராகவும் விண்ணப்பிக்கும்போது இரு சக்கர வாகன ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். பய னாளியின் ஆண்டு வருமா னம் ரூ.2.50லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மானியத்தொகை போக இருசக்கர வாகனத்தின் மீதத் தொகை செலுத்த விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். மேலும், அமைப் புசார் மற்றும் அமைப்புச் சாரா நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், கடைகள் மற்றும் நிறுவன ங்களில் வேலை செய்யும் பெண்கள், சுயமாக சிறு தொழில் செய்யும் பெண்க ள், அரசு சுய நிதி உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசுத் திட்டங்கள், சமூக அடிப்படை நிறுவனங்கள், ஊராட்சி அளவிலான குழு க் கூட்டமைப்பு, கிராம வறு மை ஒழிப்புச் சங்கங்கள், மகளிர் கற்றல் மையம் ஆகிய நிறுவனங்களில் தொகுப்பூதியம், தினக்கூலி அல்லது ஒப்பந்த ஊதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் மகளிர்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர் கள் விண்ணப்பிக்க தகுதி யுடையவர்கள் ஆவர். பயனாளிகளுக்கு கல்வி தகுதி முற்றிலுமாக நீக்கப்பட்டுள் ளது. அனைத்து ஊராட்சி ஒன் றிய அலுவலகங்கள், அனைத்துப் பேரூராட்சி அலு வலகங்கள் மற்றும் நகரா ட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பூர் த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Rescue Team ,Collector Information Women ,Perambalur District ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று...