×

கலெக்டர் அறிவுறுத்தல் நியாய விலைக்கடைகளுக்கு விற்பனையாளர், கட்டுநர்கள் தேர்வு 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு


பெரம்பலூர், நவ.25: நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர் களை தேர்வு செய்வதற்காக இன்று (25ம் தேதி) புதன்கிழமை நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வு நிவர் புயல் காரணமாக வரும் 30ம் தேதி நடைபெறும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பெரம்ப லூர் மாவட்டக் கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கான மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத் த லைவர் செல்வக்குமரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு கூட் டுறவு சங்கங்களில் நியா யவிலைக் கடைகளில் காலியாகவுள்ள விற்பனை யாளர்கள் மற்றும் கட்டுநர் களை தேர்வு செய்வதற் காக இன்று (25ம் தேதி) புதன்கிழமை நடைபெறுவ தாக இருந்த நேர்முகத் தேர்வு நிவர் புயல் காரண மாக வரும் 30ம் தேதி திங்கட்கிழமை அன்று நடைபெறும்.

இது தொடர்பானகூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள, பெரம்ப லூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் இயங்கி வரும், கூட்டுறவு சங் கங்களின் மண்டல இணை ப்பதிவாளர் அலுவலக வ ளாகத்திலுள்ள, பெரம்ப லூர் கூட்டுறவு துணைப் பதிவாளர்(பொது விநியோ கத் திட்டம்) அலுவலகத் தொலைபேசி எண் 04328- 296140ஐ தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப் படுகிறது என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : builders ,price shops ,
× RELATED ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு