×

நிவர் முன்னெச்சரிக்கை பணிகள் நிவர் புயல் நேரத்தில் முதியோர், குழந்தைகள் வெளியில் வராமல் இருப்பது நல்லது

காரைக்கால், நவ.25: நிவர் புயல் நேரத்தில், முதியோர், குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியில் வராமல் இருப்பது நல்லது. என காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜுன்சர்மா வலியுறுத்தியுள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தமானது, நிவர் புயலாக உருவாகி, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என, சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுசமயம், 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்றும், கடும் மழையும் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. அதற்கு ஏற்றார்போல், காரைக்கால் மாவட்டத்தில் நேற்று காலை முதல் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பெரும்பாலுமான மக்கள், குடிநீர், பால், பிரட், மெழுகுவர்த்தி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள், மீனவகிராமங்களில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுடன், மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆய்வு செய்தார். ஆய்வின் போது அவர் பேசியது: புயல் காரணமாக, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் குழு ஆய்வாளர்கள். யோகேஷ்வாம்னாகர் மற்றும் மோகனரங்கம் தலைமையில் 20 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழு காரைக்கால் வந்துள்ளனர். இவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை மற்றும் காவல் துறையும் இணைந்து காரைக்காலில் உள்ள மீனவ கிராமங்களுக்கு சென்று, பொதுமக்கள் புயல் மற்றும் கொரோனா நேரம் என்பதால் உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை (25ம் தேதி) 10மணி முதல் நாளை (26ம் தேதி) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : Nivar Precautions It ,children ,storm ,Nivar ,
× RELATED முதியோர்களிடம் மோசடிசெய்த நிறுவனத்துக்கு தடை