×

பவித்திரம் அருகே பூபாளியில் பழுதான மின் விளக்குகள் சரி செய்யப்படுமா?

கரூர், நவ. 25: பவித்திரம் அருகே பூபாளியில் பழுதான மின் விளக்குகளை சரி செய்ய வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சியில் பூபாளி உள்ளது. இப்பகுதிகளில் உள்ள மின் விளக்குகள் பழுதடைந்து சரி வர எரியாததால் இரவு நேரத்தில் பல்வேறு பணிகளுக்காக வெளியில் சென்று வரும் பொது மக்கள் மற்றும் பணியாளர்கள் தெருவில் நடந்து வர அச்சப்படுகின்றனர். மேலும், இரவு நேரத்தை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து விடுமோ என அப்பகுதி பொதுமக்கள் பலரும் அஞ்சுகின்றனர். மின் விளக்கை சீரமைக்க வேண்டி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் தெரு விளக்குகள் இருந்தும் எரியாமல் இருளில் மூழ்கி உள்ளோம் என அப்பகுதி பொதுமக்கள் வேதனையடைகின்றனர். எனவே மாவட்ட, ஒன்றிய நிர்வாகங்கள் முன் வந்து ஊராட்சி முழுவதும் உள்ள தெரு விளக்குகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் சரவணன் கூறுகையில் ஊராட்சியில் உள்ள பல்வேறு தெருக்களில் மின் விளக்குகளை முறையாக பராமரிக்கவில்லை இதனால் இருளில் மூழ்கியுள்ளது இதனை சீரமைக்க வேண்டி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியாவது நடவடிக்கை எடுத்தால் நல்லது என்றார்.

Tags : shrine ,Poopali ,
× RELATED அரியானூர் பாலத்தில் எரியாத மின் விளக்குகள்; சீரமைக்க வலியுறுத்தல்