×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு வேல் யாத்திரைக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்த முயற்சி: 25 பேர் கைது

கரூர், நவ. 25: கருரில் வேல் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்ற 25 பேரை டவுன் போலீசார் கைது செய்தனர். கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பாஜக சார்பில் நேற்று வேல் யாத்திரை நிகழ்வு நடைபெற்றது. இதனையடுத்து பஸ் ஸ்டாண்ட் பகுதியை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள், சாமானிய மக்கள் கட்சி, மக்கள் அதிகாரம், தமிழ்ப்புலிகள் போன்ற பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கையில் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தவாறு வேல் யாத்திரை நடைபெறும் இடத்தை நோக்கி முன்னேறிச் சென்ற 25 பேரை டவுன் போலீசார் அதிரடியாக கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : protest ,pilgrimage ,Vail ,
× RELATED விசிக ஆர்பாட்டம் வேளாண் சட்டத்தை கண்டித்து