×

கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்க வேண்டுகோள்

கரூர், நவ. 25: 2021ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழக முதல்வரால், சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்காகவும், தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் வகையில் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் கபீர் புரஸ்கார் விருது வழங்கி வருகிறது. இந்த விருதிற்கான விண்ணப்பங்கள் கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் நாளை(26ம் தேதிக்குள்) மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு அனைத்து ஆதாரங்களையும் வைத்து மூன்று நகல்கள் அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வெறிச்சோடிய மன்னார்குடி பேருந்து...