×

கலெக்டர் அறிவிப்பு நகராட்சி பகுதியில் நிறம் மாறி வரும் குடிநீரால் மக்கள் அவதி

கரூர், நவ. 25: கரூர் நகரப்பகுதிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் நிறம் மாறி வருவதால் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த வாரம் மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து மூன்று நாட்கள் கரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கரூர் நகராட்சி பகுதிகளின் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு விநியோகம் செய்யப்பட்டு வரும் தண்ணீர், சில பகுதிகளில் மண் கலந்து, மாசுடன் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே இதனை பயன்படுத்த முடியாமல் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள இந்த சமயத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக விடப்படும் குடிநீர் சுத்தமான முறையில் விநியோகம் செய்ய தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : area ,
× RELATED கரூர் மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் ...