×

திருச்சுழி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் முத்துராமலிங்கம் இல்ல திருமண விழா அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் நாளை நடக்கிறது

திருச்சுழி, நவ.25:  விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளரும் ஊரக வளர்ச்சி வங்கி தலைவருமான முத்துராமலிங்கம்-திருச்சுழி முன்னாள் யூனியன் தலைவர் பூமயில் ஆகியோரின் மகள் ஜெயாவிற்கு ராமநாதபுரம் மாவட்டம், க.சத்திரம் முருகவேல்-இந்திரா ஆகியோரின் மகன் நாகராஜபிரபுவிற்கும் நாளை காலை 9.40 மணிக்கு அருப்புக்கோட்டை காவேரி மஹாலில் திருமணம் நடைபெற உள்ளது. பால்வளத் துறை அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ராஜேந்திரபாலாஜி தலைமையிலும் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலையிலும் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்சுழி தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் செய்து வருகிறார்.

Tags : Muthuramalingam ,AIADMK ,wedding ceremony ,Rajendrapalaji ,chairmanship ,
× RELATED பெரம்பலூரில் நாளை நடக்கிறது அம்மன்...