×

சிவாலயங்களில் சங்கு பூஜை

ராஜபாளையம், நவ.25: ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் கார்த்திகை சோமவார சங்கு பூஜை  நடைபெற்றது. ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள சிதம்பரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 108 சங்கில் நீரை அடைத்து, யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்து சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காரம், விசேஷ தீபாராதனை நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Shiva ,temples ,
× RELATED வேதாரண்யம் பகுதி சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு