×

உலக நன்மை வேண்டி 108 சங்காபிஷேகம்

தேவகோட்டை, நவ.25:  தேவகோட்டை அருகே கோட்டைவயல் கிராமத்தில் பெரியநாயகி அம்பிகா சமேத நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மாதம் இரண்டாவது சோமவாரமான நேற்று முன்தினம் உலக நன்மை வேண்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடந்தது. எழுவன்கோட்டை தலைமை குருக்கள் அய்யாசாமி தலைமையில் வேத விற்பன்னர்கள் யாகம் நடத்தினர். கிராமப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED 108 ஆம்புலன்ஸ் நேர்முக தேர்வு