×

மதுரை விமான நிலையத்தில் புதிய வான்வழி போக்குவரத்து கட்டுப்பாடு மையம் கட்ட ரூ.84 கோடி நிதி ஒதுக்கீடு

அவனியாபுரம், நவ. 25: மதுரை விமான நிலையத்தில் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாடு மையம் பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதை சர்வதேச தரத்தில் மாற்றவும், நவீன ரேடார்கள்- செயற்கை கோளுடன் நேரடியாக தொடர்பு கொண்டு விமானிகளுக்கு விமானத்தை துல்லியமாக தரை இறக்கவும், விமான நிலைய விரிவாக்கத்தால் சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு புதிய கட்டிடம் நவீன தொழில் நுட்பத்துடன் கட்ட ரூ.84 கோடி இந்திய விமான ஆணையம் ஒதுக்கியுள்ளது இதற்கான டெண்டர்கள் விடப்பட்டு விரைவில் பணிகள் துவங்கவுள்ளன. மேலும் தற்போது விமான நிலையத்தில் 7 விமானங்கள் நிறுத்த வசதி உள்ள நிலையில், கூடுதலாக 7 விமானங்கள் நிறுத்துவதற்கு உண்டான பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது எனவும், இதில் கொடைக்கானல் சுற்றுலா செல்ல வசதியாக 2 நிறுத்தங்கள் ஹெலிகாப்டர் நிறுத்த ஒதுக்கவுள்ளதாக விமானநிலைய இயக்குநர் செந்தில்வளவன் தெரிவித்தார்.

‘நிவர் அலர்ட்’
நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக மதுரை விமான நிலையத்தின் உயர்கோபுர விளக்குகள் கீழே இறக்கி வைக்கப்பட்டதுடன், பயணிகள் விமானத்தில் இருந்து வெளியே உள்ளே செல்லும் ஏரோ ப்ரிஜ்கள் காற்றில் நகராமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மேலும் மழைநீர் ஓடுதளத்தில் தேங்காமல் இருக்க கால்வாய்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் தங்கு தடையின்றி செல்லவும், சென்னை, திருச்சியில் விமானங்கள் நிறுத்த இடமில்லாத நிலை ஏற்பட்டால்  மதுரையில் விமான நிறுத்தும் இடங்கள் 7ல் 2ஐ விமானம் நிறுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகம், மழையை கணக்கில் கொண்டு மேல் தீயணைப்பு உள்ளிட்ட அனைத்து துறையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Tags : air traffic control center ,Madurai Airport ,
× RELATED தொகுதி பங்கீடு குறித்து...