×

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 100 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்

திருப்பூர், நவ.25: திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்மநாபன் தலைமை வகித்தார். திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 2 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள ஓவ்வொரு வாக்குச்சாவடி பகுதிகளிலும் 100 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தி.மு.க. இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்பான விழிப்புணர்வையும் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
மத்திய அரசு தொழிற்சங்கங்களை கலந்து ஆலோசிக்காமல் கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்ட திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : polling station ,
× RELATED அரியன்வாயல் பகுதியில் வாக்குச்சாவடி...