×

ரோட்டில் கவிழ்ந்த லாரி

கோவை, நவ.25:  ேகாவை காட்டூரில் இருந்து பெயிண்ட் லோடு ஏற்றிய லாரி அவிநாசி நோக்கி நேற்று முன் தினம் இரவு சென்று ெகாண்டிருந்தது. பீளமேடு அடுத்து சித்ரா பகுதியில் சென்ற போது லாரி நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. லாரியின் முன் பக்க டயர் திடீரென வெடித்ததால் லாரி கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவரில் பாய்ந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் வேறு வாகனங்கள் அந்த வழியாக செல்லாததால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
லாரியை ஓட்டிய டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : road ,
× RELATED சாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு