×

ரயில் நிலையத்தில் காதல் ஜோடி மீட்பு

கோவை, நவ.25: கோவை ரயில் நிலையத்தில் இன்று காலை சுமார் 18 வயது இளம்பெண், 25 வயது வாலிபர் ஒருவருடன் நின்றிருந்தார். நீண்டநேரமாக அவர்கள் ரயில்வே தண்டாவள பகுதியில் சுற்றித் திரிந்தனர். ரயில்வே போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அதில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த காதல் ஜோடி என்பது தெரியவந்தது. வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள எண்ணி கோவை வந்ததாக தெரிகிறது. கோவை போலீசார் பாலக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்து காதல் ஜோடியை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags : train station ,
× RELATED ரயில் நிலைய மரத்தில் வெல்டர் தூக்கிட்டு தற்கொலை