×

ரூ.147 கோடியில் தடப்பள்ளி வாய்க்கால் சீரமைப்பு

ஈரோடு, நவ. 25:   தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால் ரூ.147 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும், இதற்காக தண்ணீர் நிறுத்தம் செய்து கொள்ளவும் விவசாயிகள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். கொடிவேரி அணை பாசனதாரர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்க நிர்வாகி சுபி.தளபதி தலைமையில் கோபில் நடந்தது. இக்கூட்டத்தில் கொடிவேரி அணை பாசனத்திற்குட்பட்ட தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால்களை சீரமைத்தல், புதுப்பித்தல் போன்ற பணிகளுக்காக ரூ.147.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது. வாய்க்கால் சீரமைப்பு பணிக்காக ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களுக்கு நீர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் அளிப்பது, ஏப்ரல் இறுதியில் இரண்டாம் போகத்திற்கான நீர் திறப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேலும் சீரமைப்பு பணிகள் தரமானதாக மேற்கொள்வதை உறுதி செய்ய அனைத்து பாசன சபைகளும் அடங்கிய குழு நியமிப்பது, கொடிவேரி பாசனப்பகுதிகளில் முதல்போக நெல் அறுவடை பணிகள் விரைவில் தொடங்க உள்ளதையடுத்து, டிசம்பர் 10ம் தேதி முதல் பாசன பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். கோர்ட் உத்தரவை மீறி பவானி ஆற்றில் இருந்தும், வாய்க்கால்களில் இருந்து ராட்சத மின்மோட்டார்களை வைத்து தண்ணீர் திருடும் கும்பல்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : canal ,
× RELATED பாபநாசம் அருகே குண்டும் குழியுமான சாலை சீரமைப்பு