×

7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் 7 மாணவிகளின் கல்வி செலவை அய்யாத்துரை பாண்டியன் ஏற்றார்

தென்காசி, நவ.25: 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க சீட் கிடைத்த 7 மாணவிகளின் கல்வி செலவை அய்யாத்துரைப்பாண்டியன் ஏற்றுக் கொண்டார்.  சங்கரன்கோவிலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் தென்காசி மாவட்டத்தில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பை பெற்ற சங்கரன்கோவில் கக்கன்நகர் மாணவி சத்யா, கடையநல்லூர் பிருந்தா, பிரீத்தா, செங்கோட்டை அஸ்வரா பேகம், பவ்ஜுல் ஹிதாயா, பூலாங்குடியிருப்பு கோமதி, தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் பகுதியை சேர்ந்த வேலுமதி ஆகிய 7 மாணவிகளுக்கு 5 வருட மருத்துவப் படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் டாக்டர் கலைஞர் கல்வி அறக்கட்டளை மற்றும் வெங்கடேஷ் குமார் நினைவு அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனத் தலைவரும், திமுக மாநில வர்த்தகர் அணி துணைத்தலைவருமான அய்யாத்துரைப்பாண்டியன் ஏற்றுக் கொண்டார்.  இதனையடுத்து நேற்று அந்த மாணவிகளுக்கு சங்கரன்கோவிலில் வைத்து பொன்னாடை அணிவித்து இனிப்பு மற்றும் முதல்வருட கல்வி கட்டணத்தை மாணவிகளுக்கு வழங்கி பாராட்டினார்.

Tags : Ayyathurai Pandian ,
× RELATED மாணவர்களுக்கு விழிப்புணர்வு