வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 14 மாவட்டங்களுக்கு செல்லும் 45 அரசு பஸ்கள் ரத்து

வேலூர், நவ.25: நிவர் புயல், மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டலத்தில் இருந்து செல்லும் 45 பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருச்சி, புதுக்கோட்டை என 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் முக்கிய வழித்தடங்களில் செல்லும் ரயில்கள், பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து மேற்கண்ட மாவட்டங்களுக்கு செல்லும் 45 அரசு பஸ்களின் சேவை நேற்று மதியம் முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>