×

கல்பாக்கம் அருகே பெண் கொலை திருமணம் செய்ய மறுத்ததால் கொன்றேன்: கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்: உடந்தையாக இருந்த நண்பரும் கைது


திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் கிராமத்தில்,  கடந்த 20ந் தேதி பெண் சடலம் கிடந்தது. இதுதொடர்பாக திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அந்தவேளையில், பெண் கொலையில் சந்தேகத்தின் பேரில், திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் கிராமத்தைச் சேர்ந்த பாபு  (30), சதுரங்கப்பட்டினம் சிவக்குமார் (37) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுமதி (35). இவரது மகள் பவானி  (17). திருக்கழுக்குன்றம் அடுத்த   குழிப்பாந்தண்டலத்தில் டிபன்கடை நடத்தி வந்தனா். பிறகு கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் பகுதியில் கடை வைத்தனர். அப்போது பாபு, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக இருந்தார். இதையொட்டி பாபு, அந்த கடைக்கு அடிக்கடி  டிபன் சாப்பிட செல்வது வழக்கம்.

அப்போது சுமதிக்கும், பாபுவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அதன்பிறகு அவர்கள், வியாபாரம் சரியாக இல்லாததால்  பெரும்புதூர் அடுத்த ஒரகடத்துக்கு கடையை மாற்றினர்.   அவர்களுடன், பாபுவும் சென்றார். நாளடைவில் சுமதியிடம் இருந்து, பவானியுடன் பாபுவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தியதால் சுமதி, மகள் பவானியுடன் சொந்த ஊரான சேலம் ஆத்தூருக்கு சென்றார். ஆனாலும் பாபு, பவானியுடன் செல்போனில் பேசி வந்துள்ளார். அப்போது பாபு, உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். என்னை தவிர யாருடனும் தொடர்பு வைக்க வேண்டாம் என பவானியிடம்  கூறியுள்ளார். அதற்கு திருமணம் செய்ய முடியாது. நீ எப்போது அழைத்தாலும், வந்து செல்கிறேன் என பவானி கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி பாபு போன் செய்தார். அப்போது அவர், பவானியை கல்பாக்கம் அழைத்துள்ளார். அதன்படி பவானி, 20ம் தேதி ஆத்தூரில் இருந்து  பஸ் மூலம் கல்பாக்கம் வந்தார். பின்னர், பாபு மற்றும் அவரது நண்பர் சிவக்குமாருடன் பூந்தண்டலத்தில் உள்ள மறைவான புதர் பகுதிக்கு சென்று தான் அணிந்திருந்த சுடிதாரை மாற்றி நைட்டி அணிந்து கொண்டு மது அருந்தி, உல்லாசமாக இருந்துள்ளார். அந்த நேரத்திலும், தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி பாபு, பவானியிடம் கேட்டுள்ளார். அதற்கு முடியாது என பவானி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பாபு, பவானியின் கழுத்தை நெரித்து, பீர் பாட்டிலால் வயிற்றில் குத்தி, தலையில் கல்லை போட்டு கொலை செய்தார் என வாக்குமூலத்தில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து போலீசார் பாபுவையும், கொலைக்கு உடந்தையாக இருந்த, அவரது நண்பர் சிவக்குமாரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Kalpakkam ,
× RELATED ஓட்டப்பிடாரம் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது