×

நிவர் புயலால் பாதிக்கப்படுவர்கள் அதிகாரிகளை தொடர்பு கொள்ள எண்கள் அறிவிப்பு

செங்கல்பட்டு: நிவர் புயலால் பாதிக்கப்படுவர்கள், அதிகாரிகளை தொடர்புகொள்வதற்கான செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம்  - காரைக்கால் இடையே நிவர் புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கடற்கரையையொட்டிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகள் பலத்த சேதமடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்படுபவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, செங்கல்பட்டு கலெக்டர் (பொறுப்பு) பிரியா தலைமையில் 273 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. புயல் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு குழுவினரை தொடர்பு கொள்ள 11 பேர் கொண்ட குழு என 33 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இதன் விவரம் வருமாறு:
• செங்கல்பட்டு ஆர்டிஓ செல்வம் (9445000414), தாசில்தார் ராஜேந்திரன் (9445000500). • ஊராட்சிகள் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் (93844531).
• சப்கலெக்டர் சுப்பிரமணி (8903508515).
• பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லலிதா (9500959938) . • ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி அம்பிகாபதி (9442169789) . • தோட்டக்கலை  துணை இயக்குனர் செலின் (9444178928). • உதவி இயக்குனர் லதா(9445213237).
• மாவட்ட வழங்கல் அலுவலர் சீதா (8056718471)  
• மதுராந்தகம் ஆர்டிஓ லட்சுமி பிரியா (9445000415).
• சப்கலெக்டர் ஜெயதீபன் (9444290577).
• கால்நடை துறை உதவி இயக்குனர் மணிமாறன் (944195290). • சப்கலெக்டர் சுப்புலட்சுமி (9443337192).
• தாம்பரம் ஆர்டிஓ ரவிச்சந்தின் ( 9597083939) .
• துணை கலெக்டர் ராமநாதன் (988409126).
• மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தியாகராஜன்(9865223471).

Tags : hurricane ,victims ,
× RELATED திமுக கூட்டணி வெறும் எண்களை அடிப்படையாக கொண்டதல்ல: ஸ்டாலின் பேட்டி