வாடகைக்கு புத்தம் புது கார்: மாருதி சுசூகி அறிமுகம்

சென்னை:  மாருதி சுசூகி நிறுவனம், மாருதி சுசூகி சப்ஸ்கிரைப் என்ற திட்டத்தை டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், புனே உள்ளிட்ட நிறுவனங்களில் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் சென்னையிலும் அறிமுகம் ஆகியுள்ளது. ஓரிக்ஸ் ஆட்டோ இன்ப்ராஸ்டிரக்சர் சர்வீசஸ் உடன் இணைந்து இது செயல்படுத்தப்படுகிறது.  இந்த திட்டத்தில், ஸ்விப்ட், டிசையர், விட்டாரா பிரஸ்சா, பலேனோ, சியாஸ், எக்ஸ்எல்6 மாடல் கார்களை, ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுக்கலாம். வாடிக்கையாளரின் பெயரிலேயே அந்த கார் பதிவு செய்து தரப்படும். மாதாந்திர வாடகையில் பராமரிப்பு, காப்பீடு போன்றவையும் அடங்கும்.

 இதுகுறித்து மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவு) செயல் இயக்குநர் சஷாங்க் வத்ஸவா கூறுகையில், ‘‘திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சென்னை, மும்பை, அகமதாபாத், காந்திநகர் ஆகிய நகரங்களிலும் இந்த திட்டத்தை அறிமுகம் செய்கிறோம். இன்னும் 2 அல்லது 3 ஆண்டில் 40 முதல் 60 நகரங்களில் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.  வாடகை ஒப்பந்த காலம் முடியும்போது வாடிக்கையாளர்களே அன்றைய சந்தை விலையில் காரை வாங்கிக் கொள்ளும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. 48 மாதங்களுக்கு ஸ்விப்ட் எல்எக்ஐ வாடகைக்கு எடுப்பவர்கள், மாதம் 15,196 வாடகை செலுத்த வேண்டி வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>