×

வீட்டின் முன்பு விளையாடியபோது பைக் விழுந்து குழந்தை பலி

தாம்பரம்: புது பெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியை சேர்ந்த முரளியின் குழந்தை சிவலிங்கம் (3), நேற்று காலை வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக் மீது ஏறி, விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியே வந்த சரக்கு ஆட்டோ பைக் மீது உரசியதில், குழந்தை தவறி கீழே விழுந்தது. அதன்மீது பைக் விழுந்ததால் படுகாயமடைந்த குழந்தை அலறி துடித்தது. உடனடியாக குழந்தையை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து ஏற்படுத்திய சரக்கு ஆட்டோ டிரைவர் ரமேஷை (37) போலீசார் கைது செய்தனர்.

Tags : house ,
× RELATED பைக் திருட்டு