×

3 பேர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் விமானப்படை அதிகாரி கைது

தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டையை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் தலில் சந்த் (74), அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் சீத்தல் (40) ஆகியோர் கடந்த 11ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசார் விசாரணையில், சொத்து தகராறில் சீத்தலின் மனைவி ஜெயமாலா, அவரது சகோதரர்கள் கைலாஷ், வழக்கறிஞர் விலாஷ் உட்பட 6 பேர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது தெரிந்தது. அவர்களை தனிப்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கொலையாளி கைலாஷ் பயன்படுத்திய துப்பாக்கி ஜெய்ப்பூரை சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி ராஜீவ் துபேவுக்கு (59) சொந்தமானது என தெரியவந்தது. அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி யானைக்கவுனி போலீசார் உத்தரவிட்டனர். அதன்படி, அவர் நேற்று முன்தினம் ஆஜராகி, தனது காரை கைலாஷுக்கு விற்றபோது, அதில் இருந்த எனது துப்பாக்கியை மறந்து விட்டேன் என தெரிவித்துள்ளார். இருப்பினும், துப்பாக்கி அவரது பெயரில் வாங்கி இருந்ததால், 3 பேர் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கருதி ராஜீவ் துபேவை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Air Force ,officer ,death ,
× RELATED இந்திய விமானப்படைக்கு 5ம் தலைமுறை போர்...