×

பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில், பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டியில்  செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்குகிறது. இங்கு செல்போன், லேப்டாப், டிவி உள்பட மின் சாதன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில், 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாறுகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் மற்றும் ஊதிய உயர்வு கேட்ட பணியாளர்களை கம்பெனி நிர்வாகம் பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. இந்நிலையில், பணியில் இருந்து ஊழியர்களை நீக்கியதை கண்டித்தும், ஊதிய உயர்வு வழங்ககோரியும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று முதல், நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் நிர்வாகத்தினர் மற்றும் செங்கல்பட்டு தாலூகா போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படவில்லை.  தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

Tags : company ,
× RELATED காஞ்சிபுரம் சரிகை தொழிற்சாலையில்...