×

ஊரடங்கு தளர்வுக்கு பின் புறநகர் ரயில்களில் பெண்கள் பயணம்


செங்கல்பட்டு: புறநகர் மின்சார ரயில்களில், நேற்று காலை 10 மணி முதல் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு பகுதியில் இருந்து ஏராளமான தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் பயணம் செய்தனர்.
கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச் மாதம் முதல் மின்சார ரயில்கள் இயக்குவதை தென்னக ரயில்வே நிறுத்தியது. பின்னர், மாநில அரசு ஊரடங்கு தளர்வு அறிவித்த பின்னர், பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், நடுத்தர மக்கள், பஸ்களில் டிக்கெட் எடுத்து செல்ல அதிக செலவு ஏற்பட்டது. இதனால், மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, சென்னை புறநகர் மின்சார ரயில்களில் 23ம் தேதி முதல் பெண்கள் பயணிக்கலாம் என தென்னக ரயில்வே அறிவித்தது.

இதைதொடர்ந்து, நேற்று காலை 10 மணிமுதல் பெண்கள், குழந்தைகள் ரயில்களில் பயணிக்கலாம் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு தினமும் அத்தியாவசிய பணிகளுக்காக செல்வோருக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் தென்னக ரயில்வே அறிவிப்பின்படி, நேற்று காலை முதல் பெண்கள் மற்றும் குழந்தைகள் ரயில் நிலையத்தில் டிக்கெட் பெற்று கொண்டு பயணம் செய்தனர். அவர்களுக்கு காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் பயணம் செய்தனர். முன்னதாக, ரயில் நிலைய வளாகத்தில் பரிசோதனை செய்த பின்னரே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...