முரசொலி மாறன் படத்திற்கு மாலை அணிவிப்பு சில்லறை கேட்பதுபோல் நடித்து காய்கறி விற்கும் பெண்ணிடம் பணப்பையை பறித்தவர் கைது

திருச்சி, நவ. 24: திருச்சியில் 500 ரூபாய்க்கு சில்லறை கேட்பது போல் நடித்து காய்கறி விற்கும் பெண்ணிடம் பணப்பையை பறித்தவர் கைது செய்யப்பட்டார். திருச்சி பீமநகர் யானை கட்டி மைதானத்தில் ஏராளமான காய்கறி கடைகள் உள்ளது. இங்கு இதே பகுதியை சேர்ந்த ஜெயமேரி(43) என்பவர் காய்கறி கடை வைத்துள்ளார். இவர் கடந்த 19ம் தேதி மைதானத்தில் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆண் ஒருவர் 500 ரூபாய்க்கு சில்லறை கேட்டுள்ளார். ஜெயமேரியும் சில்லறை கொடுக்க தனது சுருக்கு பையிலிருந்து பணத்தை எடுத்து எண்ணிக்கொண்டிருந்தார். அப்போது அவர் சுருக்கு பையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். அதில் ரூ.30 ஆயிரம் ரொக்கம் இருந்துள்ளது.

இது குறித்து ஜெயமேரி அளித்த புகாரின் பேரில் கோர்ட் போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவி கேமரா மூலம் நேற்று முன்தினம் பணம் பறித்து சென்றவரை தேடி பிடித்தனர். விசாரணையில் அவர் நம்பர் 1 டோல்கேட் ராகவேந்திரா நகரை சேர்ந்த சண்முகம்(55) என தெரியவந்தது. அவரை எஸ்ஐ மல்லிகா கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் ரூ.10 ஆயிரத்தை செலவு செய்தது தெரியவந்தது. மீதி ரூ.20 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Related Stories:

>