வாலிபரை கட்டையால் தாக்கி பணம், செல்போன் பறிப்பு

திருச்சி, நவ.24: திருச்சி கே.கே.நகர் எல்ஐசி காலனியை சேர்ந்தவர் சீனிவாசராகவன்(28). இவர் திருவானைக்காவலில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் வாஷிங்மெஷின் சர்வீஸ் செய்யும் வேலை செய்து வருகிறார். இதில் நேற்று முன்தினம் துறையூரில் வாஷிங்மெஷின் சர்வீஸ் செய்ய சென்றார். தொடர்ந்து பணி முடிந்து கடைக்கு வந்து பின் பைக்கில் இரவு வீட்டிற்கு சென்றார். முன்னதாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பார்சல் சர்வீஸ் அருகே சென்றபோது, அவரை வழிமறித்த 2 பேர், உருட்டுக்கட்டையால் தாக்கி அவரிடமிருந்து ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ரங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>