×

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம் பாதி மொட்டை தலையோடு விவசாயிகள் டெல்லி பயணம்

திருச்சி, நவ. 24: திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்படும் புகார்கள், இணைய வழியில் பெறப்படும் புகார்கள், வாட்ஸ்அப் மூலம் பெறப்படும் புகார்கள் அனைத்திற்கும் உடனடி தீர்வு காணும் வகையிலும் மேலும் காணாமல் போனவர்கள் பற்றிய புகார், அளிக்கப்பட்ட மனுதாரர்கள் மனுக்கள் மீதான குறைகள் தீர்ப்பு முகாம் நடத்தி நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் திருச்சி மாநகர அனைத்து சரகங்களிலும் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. அதன்படி கன்டோன்மென்ட் மற்றும் பொன்மலை சரகத்திற்கு கருமண்டபத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும், கோட்டை மற்றும் ரங்கம் சரகத்திற்கு தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும் 99 மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.

இதில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்ஐக்கள் ஆகியோர் கலந்து கொண்டு மனுதாரர்களை நேரடியாக வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் 99 மனுக்களில் 55 மனுதாரர்கள் மட்டும் ஆஜராகி இருந்தனர். அதில் காணாமல் போனவர்களின் புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தும், பெயர், விலாசம் தெரியாமல் இறந்துபோனவர்களின் புகைப்படங்களையும் பெற்று காணாமல் போன உறவினர்களிடம் காட்டி விசாரணை செய்யப்பட்டது. இதில் காணாமல் போனவர்களில் 10 பேர் கண்டறியப்பட்டு அதில் 8 பேர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஒருவர் இறந்துவிட்ட நிலையில், ஒருவர் வெளியூரில் இருப்பதையும் கண்டறியப்பட்டது.
அய்யாக்கண்ணு தலைமையில் இன்று செல்கின்றனர்.

Tags : Aurangam Ranganathar ,Delhi ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...