×

ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தியதை திரும்பபெற வலியுறுத்தி திருவாரூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா

திருவாரூர், நவ.24: பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், , 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு எதிராக ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அரசுத்துறைகளில் ஒப்பந்தம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறைகளை தவிர்த்திட வேண்டும், தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், கொரோனா தடுப்பு பணியாற்றிய மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், லேப் டெக்னீசியன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு ஊதியத்தினை உடனடியாக வழங்கிட வேண்டும்.

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, குடவாசல் பகுதி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான கிரேடு 2 வீட்டு வாடகைப்படி வழங்கவேண்டும், சாலைகள் பராமரித்தலை தனியாரிடம் ஒப்படைக்காமல் புதிய பணியாளர்களை நியமித்து பராமரிக்க வேண்டும், அ மற்றும் ஆ பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : withdrawal ,Thiruvarur Government Employees Union ,
× RELATED பாஜக தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா,...