×

மாவட்ட அலுவலர் உத்தரவு காட்டூர் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் முரசொலி மாறன் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

திருவாரூர், நவ. 24: திருவாரூர் அருகே காட்டூர் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் முரசொலி மாறன் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்முரசொலி மாறனின் 17வது நினைவு தினத்தையொட்டி திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளரும் ,மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருமான சேகர் கலியபெருமாள், திருவாரூர் நகர செயலாளர் வாரைபிரகாஷ், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஜினி சின்னா, காட்டூர்ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சதீஷ்குமார், வீரபத்திரன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் பூண்டி கலைவாணன் கூறுகையில், மறைந்த தலைவர் கருணாநிதியின் மனசாட்சி யாகவும், தற்போதைய தலைவர் மு க ஸ்டாலினின் அரசியல் ஆலோசகராகவும் திகழ்ந்தவர் முரசொலி மாறன். மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டுவந்தவர். இதேபோல் திமுகவின் முன்னேற்றத்திற்கும் வழி வகுத்துக் கொடுத்தவர் முரசொலி மாறன். இந்நிலையில் அவரது 17 வது நினைவு தினத்தையொட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : District Officer ,
× RELATED குளித்தலை நகர திமுக அவைத்தலைவர்...