×

போதை கணவர் கைது மத்திய அரசை அகற்றும் வரை ஒன்றுபட்ட உறுதியான போராட்டம் முன்னெடுக்க உறுதிமொழி ஏற்பு

தஞ்சை, நவ. 24: தஞ்சை ஏஐடியூசி மாவட்ட அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தியாகராஜன் 7ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார் தியாகராஜனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தமிழகத்தில் தாய்மொழி வழிக்கல்வி, நிதி நீர் உரிமை, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர்களின் உழைப்பையும் போராடி பெற்ற உரிமைகளையும் நாட்டின் இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை அகற்றும் வரை ஒன்றுபட்ட உறுதியான போராட்டத்தை முன்னெடுப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், சிபிஐ நிர்வாகிகள் கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், ஏஐடியூசி மாவட்ட தலைவர் சேவையா, பொருளாளர் கோவிந்தராஜ், அரசு போக்குவரத்து சங்கம் துரை மதிவாணன், கட்டுமான சங்க செல்வம், தெரு வியாபாரி சங்கம் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : arrest ,government ,drug husband ,
× RELATED பத்திரப்பதிவில் மதிப்பை குறைப்பதால்...