பொது வேலை நிறுத்தத்தை விளக்கி பிரசார இயக்கம்

தஞ்சை, நவ. 24: வரும் 26ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடக்கிறது. இதை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் தர்மராஜ் முன்னிலையில் அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் பிரசார இயக்கம் நடந்து வருகிறது. இதில் புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் உரிமைகள் முழுமையாக பறிக்கப்படுகிறது. விளை பொருட்களுக்கு நியாயமான விலைக்கு உத்தரவாதம் இல்லை. நெல் கொள்முதல் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுகிறது. கட்டுப்பாடற்ற மின்கட்டணம் உயர்வுக்கு வழி வகுத்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்கள் சேவை புறக்கணிக்கப்படுவது குறித்து விளக்கி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சோமு, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: